மார்கழி சிலுவை..!

See more by Devibala

Available at Select Retailers

ஐ லவ் யூ ராபர்ட்!"
 அந்த வாக்கியம் அவள் வாயிலிருந்து உதிர்ந்ததும் வெல வெலத்துப் போனான் ராபர்ட்!
 நிமிர்ந்து எஸ்தரைப் பார்த்தான்.
 "இப்ப என்ன சொன்னீங்க?"
 "ஐ லவ் யூனு சொன்னப்புறம் எதுக்கு 'ங்க' போட்டு பேசணும் ராபர்ட்? நானே உரிமையோட உன்னை வா போன்னுதான் கூப்பிடப் போறேன்"
 ராபர்ட் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டான்!
 சைக்கிளில் உட்கார்ந்தபடி தரையில் கால் ஊன்றி ஒயிலாக நின்றாள் எஸ்தர்.
 பெண்களுக்கு இத்தனை உயரமா என்று பிரமிக்கும்படி ஏறத்தாழ ஐந்தரை அடி உயரம்!
 எஸ்தர் பளீரென்ற பால்கோவா நிறம்! இடுப்பைத் தொட்டுப் பார்க்கும் நீளமான கூந்தல்... படபடக்கும் பட்டாம்பூச்சி இமைகள்... மொத்தத்தில் அசர வைக்கும் அழகுக்கு சொந்தக்காரி எஸ்தர்!
 "ஓகே! நான் உன்னை அப்புறம் பாக்கறேன் ராபர்ட். கம்ப்யூட்டர் க்ளாஸுக்குப் போறேன்!"
 சிட்டாகப் பறந்து விட்டாள்.
 "ராபர்ட் யார்கிட்ட பேசிட்டு இருந்தே?"
 அம்மாவின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.
 "யாரோ விலாசம் கேட்டாங்கம்மா!"
 உள்ளே வந்துவிட்டான் ராபர்ட்

அதைத் திறம்பட செய்து வந்ததால் ஏகப்பட்ட சவப்பெட்டிகளுக்கு அவருக்கு ஆர்டர் வரும்!
 அதில்தான் குடும்பமே பிழைத்தது.
 இருந்தாலும் வசதியான குடும்பம் என்று சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கஷ்ட ஜீவனம்தான்.
 ராபர்ட் ஒரே பிள்ளை... மூன்று பெண்கள். இரண்டு சகோதரிகளைக் கல்யாணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஒருத்தி பாக்கி!
 கடனை உடனை வாங்கி சகலமும் நடத்தியவர் ஜார்ஜ்தான்!
 அதனால் ராபர்ட்டை எஸ்.எஸ். எல்.சிக்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை! ராபர்ட் பிளம்பிங்... வெல்டிங் போன்ற வேலைகளைக் கற்றுக் கொண்டு தனிப்பட்ட முறையில் வீடுகளுக்கு வேலைகளைச் செய்து வருகிறான்.
 புதிய ஃப்ளாட்டுகள் கட்டப்படும் போது சிபாரிசின் மூலம் ப்ளம்பிங் வேலைகள் இவனுக்குக் கிடைக்கும். அதில் கணிசமான ஒரு தொகை கைக்கு வரும்!
 சிலசமயம் வேலையே இருக்காது.
 ஆனால் ராபர்ட் பரோபகாரி!
 அந்த ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் உதவிகள் செய்வான்.
 வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான். அப்படி பழக்கமானவர்தான் ஆல்பர்ட்!
 ஒரு வருடத்துக்கு முன்னால் கல்கத்தாவிலிருந்து மாற்றலாகி இங்கு வந்த என்ஜினியர்! அரசாங்க வேலை என்பதால் உடனடியாக அவருக்கு வீடு கொடுத்து விட்டார்கள்.
 அந்த வீட்டின் பராமரிப்பு, தெரிந்தவர் மூலம் ராபர்ட்டுக்குக் கிடைத்தது.
 ஆல்பர்ட் குடிவந்த அன்றே அவர் வீட்டு பைப் உடைந்து தண்ணீர் பெருக, அவசர அழைப்பு ராபர்ட்டுக்கு. பாடுபட்டு சரி செய்துவிட்டான்.

அவனை உட்கார வைத்து டிபன் காபி தரச் சொன்னார் ஆல்பர்ட்!
 ஆல்பர்ட்டுக்கு வயது அதிகபட்சம் முப்பத்தைந்து இருக்கலாம். மனைவி உண்டு! ஏழு வயதில் ஒரு மகன். தவிர தங்கை எஸ்தர்!
 வேலை செய்பவர்களுக்கு நன்றாகப் பணம் தருவார்.
 முதலாளி, தொழிலாளி என்ற பேதம் பார்க்காமல் அன்புடன் பழகுவார்...
 ராபர்ட்டை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
 அவன் அந்த வீட்டோடு நெருங்கிப் பழகத் தொடங்கினான்.
 எஸ்தர் பி.காம் படிப்பை முடித்திருந்தாள்.
 கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்திருந்தாள்.
 ஆல்பர்ட் அவ்வப்போது நிறைய ஜாப் வொர்க்குகளை ராபர்ட்டுக்கு பிடித்துத்தர, அவர் புண்யத்தில் மாதம் 25. நாட்களும் அவனுக்கு வேலை இருந்தது.
 தன் வேலை நேரம் போக, மீதி நேரம் அவர் வீட்டில்தான் இருப்பான் ராபர்ட்.
 அவர்களுக்கு ரேஷன் வாங்கி வருவது... எலக்ட்ரிஸிட்டி பில் கட்டுவது, மாவு மெஷினுக்குப் போவது எல்லாம் அவன்தான்.
 ஆல்பர்ட்டின் மனைவி ஹெலனும் தங்கமானவள்.
 அண்ணி என்றுதான் அழைப்பான்.
 "ராபர்ட்! சாயங்காலம். சீக்கிரம் வந்தா அச்சப்பம் ரெடியா இருக்கும்!"
 "வந்துர்றேன் அண்ணி!"
 இப்படி நெருங்கிப் பழகும் போது எஸ்தரும் நன்றாகப் பழகத் தொடங்கி விட்டாள்

Other books by Devibala