அந்தச் சிறிய டேப்ரிகார்டரில் ஒற்றை ஸ்பீக்கரிலிருந்து கந்தர் ஷஷ்டி கவசம் மெலிசான வால்யூமில் தவழ்ந்து கொண்டிருக்க பழைய மாடல் பிம்பாம் சுவர்க் கடிகாரம் சற்றுக் கரகரத்த சுருதியில் ஆறு முறை அடித்தது. ஜன்னலுக்கு வெளியே மாலை நேரம் மந்தாரமான சூரிய வெளிச்சத்தில் இருந்தது. வெங்கடேசன் சாயங்கால பூஜையை முடித்துக் கொண்டு அந்தக் குறுகலான பூஜையறையை விட்டு …